Saturday 19 August 2017

மருத்துவ சேர்க்கையில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

மருத்துவ சேர்க்கையில் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி | மருத்துவ மாணவர் சேர்க்கையில் இருதரப்பிலும் எந்த மாணவரும் பாதிக்காத வகையில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் ஆகிய மூன்றும் சேர்ந்து எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நல்ல முடிவை சொல்லுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தமிழக மாணவர்களின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீட் தேர்வு எழுதிய மாணவர்களும் நம்முடைய மாணவர்கள் தான். நிச்சயமாக சொல்கிறேன், அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த மாணவரும் பாதிக்காத வகையில் முடிவு எடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்போம். ஓரிரு நாட்களில் மத்திய அரசு முடிவை தெரிவிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. ஓராண்டு விலக்குக்கான அவசர சட்டம் கொண்டுவந்ததில் எந்த காலதாமதமும் இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டன. ஆனால் தமிழ்நாடு தான் அரசியல்ரீதியாக, சட்டரீதியாக விலக்கு பெற தொடர்ந்து முயற்சி செய்கிறது. மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் ஆகிய இருதரப்பு மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. எனது தலைமையில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாட்டில் 456 மருத்துவ இடங்கள் மத்திய அரசின் ஒதுக்கீட்டில் செல்லும். இந்த 456 இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடு அல்லாத இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழக இடங்கள் அனைத்தும் நீட் தேர்வு அடிப்படையிலேயே நிரப்பப்படும். இந்திய மருத்துவ கவுன்சிலின் நிலைப்பாட்டை வைத்து அவர்களை எதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களிடமும் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி பேசுவோம். சுகாதாரத்துறை செயலாளர் இதுதொடர்பாக பேசியிருக்கிறார். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இப்படித்தான் நடைபெறும் என்பதை அரசு அறிவித்துவிடும். கலந்தாய்வுக்கு ஒரு வாரம் தான் தேவை. 5 அல்லது 6 நாட்களில் கலந்தாய்வை நடத்தி முடித்துவிடலாம். ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுவிடும். இவ்வாறு டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார். முன்னதாக அவர் மத்திய மந்திரிகள் சிலரை சந்தித்து பேசினார். இருதரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...