Monday 17 July 2017

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (17.7.2017) தொடங்குகிறது. 1.20 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் 1.20 லட்சம் இடங்கள் நிரப்பப்படும் | பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மொத்தம் 523 பொறி யியல் கல்லூரிகள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. பொதுவாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வு பிரச்சினையால் மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போயுள்ளது. இந்நிலையில், பொறியியல் படிப் புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். அவர்கள் அனைவரும் கலந் தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். முதல்கட்டமாக இன்றும், நாளையும் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந் தாய்வு நடக்கிறது. 19-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும், 19, 20 தேதிகளில் விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் 21-ல் விளையாட்டு பிரிவு கலந்தாய்வும் நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ல் முடிகிறது. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் இணையதளத்தில் பதிவேற் றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காலை 7 மணிக்கு நடக்கும் கலந் தாய்வில் கலந்துகொள்ள வெளியூர் களில் இருந்து வரும் மாணவர்கள், ஒரு நாள் முன்னதாக வந்து, பல்கலைக்கழக விடுதியில் தங்கிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாணவர்கள், பெற்றோரின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் பல்கலைக்கழக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன  DOWNLOAD

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...