Wednesday 28 June 2017

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு கலந்தாய்வு தள்ளிவைப்பு | என்ஜினீயரிங் படிப்புக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவ கலந்தாய்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ரேங்க் பட்டியல் தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 584 உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கு 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் விண்ணப்பித்தனர். இதில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 988 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். அவர்களில் ஆண்கள் 85 ஆயிரத்து 950. பெண்கள் 51 ஆயிரத்து 38 ஆகும். விண்ணப்பித்தவர்களில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 1,146 பேரும், மாற்றுத்திறனாளிகள் 227 பேரும், விளையாட்டு மாணவர்கள் 2,082 பேரும் உள்ளடங்குவர். 70 ஆயிரத்து 769 பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள். கடந்த 20-ந்தேதி 'ரேண்டம்' எண் வெளியிடப்பட்டது. ரேங்க் (தரவரிசை) பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- கலந்தாய்வு தள்ளிவைப்பு என்ஜினீயரிங் விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வு 27-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. மருத்துவ கலந்தாய்வு தொடங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுத்து அறிவித்த பின்னர், என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்து 59 பேர் உள்ளனர். அவர்களில் 36 பேர் 'நீட்' தேர்வு முடிவை எதிர்பார்த்து உள்ளனர். அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 199 கட்-ஆப் மதிப்பெண்ணில் 811 பேர் உள்ளனர். அவர்களில் 645 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. 198 கட்-ஆப் மதிப்பெண்ணில் 2,097 பேர் உள்ளனர், அதில் 1,681 பேர் மருத்துவம் செல்ல வாய்ப்பு உள்ளது. 197 கட்-ஆப் மதிப்பெண்ணில் 3,766 பேர் உள்ளனர். இவர்களில் 3,016 பேர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவ கலந்தாய்வுக்கு முன்பாக என்ஜினீயரிங் கலந்தாய்வு நடத்தினால் என்ஜினீயரிங் தேர்வு செய்த பலர் மருத்துவ படிப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும். அதை கருத்தில் கொண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...