Thursday 30 April 2015

மே 7-ல் பிளஸ் 2, மே 21-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள் www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge3.tn.nic.in

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ல் வெளியாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே21-ல் வெளியாகிறது என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ''பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது'' என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள், இணைய தளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள லாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge3.tn.nic.in

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...