Sunday 10 February 2013

கணிதப்பாட வினாத்தாள் சந்தேகம்: அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் சந்தேகம் குறித்து, மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வடிவமைப்பு, பாடத்தில் எந்தெந்த பிரிவில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும், என மாணவர்கள் மத்தியில் சில சந்தேகங்கள் இருந்தது.
இதுகுறித்து பள்ளிகளில் இருந்து, மனுக்கள் வந்ததை தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வுகள் இயக்ககம் அனுப்பியுள்ள அறிக்கை:

வினாத்தாள் வடிவமைப்பில், பிரிவு - அ பகுதியில் இடம் பெறும் 15 வினாக்களும், பத்தாம் வகுப்பு கணிதப்பாட புத்தகத்தின், ஒவ்வொரு அலகின் (யுனிட்) முடிவிலும் தொகுத்து அளிக்கப்பட்டு உள்ள வினாக்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும்.

பிரிவு-ஆ மற்றும் பிரிவு- இ பகுதிகளில், முதல் 14 வினாக்களில் பாடப்புத்தகத்திற்கு வெளியிலிருந்து கேட்கப்படும், 2 வினாக்கள் இடம்பெறும். அந்த 2 வினாக்களும், மெய்யெண்களின் தொடர் வரிசைகளும் தொடர்களும், இயற்கணிதம், ஆயத்தொலை வடிவியல் மற்றும் அளவியல் ஆகிய நான்கு பாடப்பகுதியில் இருந்து மட்டும் கேட்கப்படாது.

அனைத்துப் பாடப்பகுதியில் இருந்தும் கேட்கப்படும். பிரிவு- ஆ, பிரிவு - அ பகுதிகளில் இடம் பெறும் கட்டாய வினாக்கள் (30 ஏ, பி; 45 ஏ,பி) பாடப்புத்தகத்தின் அனைத்து பாட பகுதியிலிருந்தும் கேட்கப்படும்.

வினாத்தாளின் மூன்று பகுதிகளில் கேட்கப்படும் எடுத்துக்காட்டு மற்றும் பயிற்சி கணக்குகளின் எண்ணிக்கையில் எவ்வித நிபந்தனையின்றி, எந்த எண்ணிக்கையிலும் கேட்கப்படலாம்.

பிதாகரஸ் தேற்றத்தின் நிரூபணம் தேர்வுக்கு இடம் பெறக்கூடிய பகுதியில் உள்ளது. நிரூபணம் தேவையில்லை என்பது தவறு, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும், தெரிவிக்க வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...