Saturday 15 September 2012

அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

 ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில்,ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வினை கடந்த ஜுலை மாதம் நடத்தியது.இந்த தேர்வில், 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் கலந்துக் கொண்டனர். இதில், இடைநிலை, உதவி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.மறுதேர்வுஇதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் 26.8.2012 அன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு 3.10.2012 அன்று மறு தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்காக புதிதாக விண்ணப்பம் செய்ய தேவையில்லை என்றும் கூறியுள்ளது.நான் பி.எஸ்.சி., (கணிதம்) பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். கடந்த ஜுலை மாதம் நடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும், இந்த கல்வியாண்டில் புதிதாக பி.எட். படித்தவர்களும் அக்டோபர் 3-ந் தேதி நடக்கும் மறு தேர்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.உரிமை மறுப்புஇதனால் அரசு வேலைவாய்ப்பை பெறும் உரிமை எனக்கு மறுக்கப்படுகிறது. எனவே, இந்த மறுதேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். அக்டோபர் 3-ந் தேதி நடக்க உள்ள தேர்வில் என்னை கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, `அக்டோபர் 3-ந் தேதி நடக்கவுள்ள தேர்வுக்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு அனுமதி வழங்கினால், அதற்கு காலநேரம் போதாது' என்று வாதம் செய்தார்.விரிவான பதில் மனுமனுதாரர் சார்பில் வக்கீல் அருண்குமார் ஆஜராகி, `ஏற்கனவேவிண்ணப்பத்தாரர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பது சட்டவிரோதமாகும்` என்று வாதம் செய்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, `தேர்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிட்ட பின்னர், அதே விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வு நடத்த முடியாது. இந்த தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் கலந்துகொள்ள அனுமதி அளிப்பது குறித்து அரசுடன் கலந்து ஆலோசனை செய்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை வரும் 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...