Wednesday 18 April 2012

ஆசிரியர்களுக்குத் தேவையான வினா-விடை

தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கி வருகிறோம். அதன்படி அடுத்த வினாவிடைத் தொகுப்பை இங்கு காணலாம்.
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்கள்
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர்.
2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகளை நோக்கி விரிந்து சென்று பல பொருத்தமான விடைகளை தருவது - விரி சிந்தனை
3. சோதிக்கப்படுவோனின் ஆக்கத் திறனை அளக்கப் பயன்படுவது - தலைப்பு தரும் சோதனை.
4. அகமுகன், புறமுகன் என மனிதர்களை இருவகையாக பிரித்தவர் - யூங்
5. சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.
6. புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
7. புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.
8. ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு
9. மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை - குவிச்சிந்தனை முறை
10. தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும்.
11. இரட்டைக் காரணி கோட்பாட்டில் சிறப்புக் காரணிக்கான எழுத்து - எஸ்
12. பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு
13. இரட்டைக் காரணி கோட்பாட்டில் பொதுக் காரணிக்கான எழுத்து - ஜி.
14. நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.
15. நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - தார்ன்டைக்
16. நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே.
17. நுண்ணறிவு என்பது பொதுத் திறன் என்று கூறுபவர்கள் - ஒற்றைக் காரணி கோட்பாட்டினர்.
18. ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே.
19. நுண்ணறிவின் தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்
20. வெக்ஸலரின் நுண்ணறிவு சோதனைக்கான வயது - 7-15
21. நுண்ணறிவு ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர் - டெர்மன்.
22. உளவியலறிஞரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது - 16 வயது வரை இருக்கும்
23. 20 வயதான ஒருவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிட தேவைப்படும் கால வயது - 16 வயது
24. சொற்சோதனையை மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்.
25. ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
26. மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள்.
27. பொருட்களை புதிய பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல், - பயன் சோதனை.
28. புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்.
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்கள் இத்துடன் முடிவடைகிறது. அடுத்து வேறு ஒரு பாடத்திற்கான வினா-விடையுடன் சந்திக்கிறோம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு : உங்களுக்கு உதவ
ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக
ஆசிரியர்களுக்கான வினா-விடை மாதிரிகள்
குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினா விடை
தேர்வு வாரியம் அளித்த மாதிரி வினாத்தாள்

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...